இதுதான் இந்தியா ; கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல ,அதையும் தாண்டியது -சேவாக்

sehwag

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய தொடரில் வலை பயிற்சி மேற்கொள்ள தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சுலபமாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அவரே எதிர்பார்க்காத வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. இவரது பந்துவீச்சை பார்த்து பலரும் பாராட்டினர்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பிய நடராஜனை சின்னப்பம்பட்டியை சேர்ந்த மக்கள், மேளதாளத்துடன் அவரை சாரட் வண்டியில் ஆரவாரமாக அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், நடராஜனுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதுதான் இந்தியா. இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அதற்கும் மேலானது என்று நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வீடியோ காட்சியுடன் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *