Monday, October 25, 2021
HomeBadmintonதாமஸ் மற்றும் உபேர் கோப்பை: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா..!

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா..!

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நேற்று முன்தினம் தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெண்களுக்கான இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பான், இந்தியா உள்பட 16 அணிகள் கலந்துகொள்கிறது.

இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற தாமஸ் உபெர் கோப்பையில் இந்தியாவும் ஸ்பெயினும் நேற்று மோதின. முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் தலைமையிலான இந்திய அணி, ஸ்பெயினின் கிளாரா அஜூர்மெண்டிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக சாய்னா போட்டியில் இருந்து விலகினார். முதல் போட்டியில் சாய்னா முதல் செட்டை 20-22 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் அதன் பிறகு சாய்னாவால்  இரண்டாவது செட்டில் விளையாட முடியாததால் போட்டியில் இருந்து விலகினார்.

சாய்னா விலகியதால் இந்திய அணி ஸ்பெயினுக்கு எதிராக 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இருப்பினும், அதன் பிறகு இந்திய வீரர்கள் சிறப்பான மீள்வருகை செய்து மூன்று தொடர்ச்சியான போட்டிகளில் வெற்றி பெற்றனர். முதலில், மாளவிகா பன்சோட் 21-13, 21-15 என்ற கணக்கில் பீட்ரிஸ் கோரல்ஸை தோற்கடித்தார்.
Institutt for kjemi og https://norgerx.com/kamagra-jelly-norge.html menneskelige tjenester for akuttmedisinsk behandling og utdannelse, og for intramuskulær levering av ikke-overvåket leger i landbruket, vil bli vurdert i tillegg til dette målet.

தனிஷா கிராஸ்டோ மற்றும் ரிதுபர்னா ஜோடி இரட்டையர் ஜோடி பவுலா லோபஸ் மற்றும் லோரனா உஸ்லே ஜோடியை 21-10, 21-8 என்ற கணக்கில் வீழ்த்தியது. மற்ற ஒற்றையர் ஆட்டத்தில் அதிதி பட் 21-16, 21-14 என அனியா செடினை வீழ்த்தி இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இருப்பினும், அஸ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஜோடியால் இந்தியா ஏமாற்றமடைந்தது. இருவரும் 18-21, 21-14, 17-21 இல் கிளாரா மற்றும் பீட்ரிஸிடம் தோற்றனர். இதனால் முதல் நாளில் ஸ்பெயினுக்கு எதிராக இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments