Tuesday, September 21, 2021
HomeCricketTNPL: 3-வது முறை கோப்பையை வென்றது சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்..!

TNPL: 3-வது முறை கோப்பையை வென்றது சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்..!

TNPL: இறுதிப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

தமிழ் நாடு பிரிமீயர் லீக் டி 20 இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி  ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற திருச்சி வியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்தனர்.

சேப்பாக் அணியில் ஜெகதீசன் அளவிற்கு 90 ரன்கள் அடித்தார். இதனையடுத்து 184 ரன் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி தொடக்க வீரர்கள் அமீத் சாத்வீக் மற்றும் சந்தோஷ் ஷீவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அமீத் சாத்வீக் 16 பந்துகளில் 36 ரன்களை குவித்து வெளியேறினார். சந்தோஷ் ஷீவ் 12 பந்துகளில் 16 ரன்களை எடுத்து வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்களில் இறுதியில் திருச்சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments