Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் ஏமாற்றம்..!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் ஏமாற்றம்..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குண்டு ஏறிதல் போட்டியில்  இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் ஏமாற்றம்.

ஆண்களுக்கான குண்டு ஏறிதல் போட்டியின் தகுதிச்சுற்று இன்று நடைபெறுகிறது. முதலில் குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கான தகுதி போட்டி நடைபெறுகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு குரூப்பிலும் சேர்த்து முதல் 12 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அல்லது 21.20 மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு எரியும் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் தலா மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். இந்திய வீரர் தஜிந்தர் சிங் டோர் முதல் வாய்ப்பில் 19.99 மீட்டர் தூரம் எறிந்தார்.
2-வது மற்றும் 3-வது வாய்ப்புகள் பவுல் ஆனது. இதனால் 19.99 மீட்டர் அவரின் இலக்காக எடுக்கப்பட்டது. அவர் எறிந்த தூரம் 13-வது இடத்தைப் பிடித்தது. இதனால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments