Tuesday, September 21, 2021
HomeFootballடோக்கியோ ஒலிம்பிக்: கால்பந்து இறுதிப்போட்டியில் மோதும் சுவீடன்- கனடா..!

டோக்கியோ ஒலிம்பிக்: கால்பந்து இறுதிப்போட்டியில் மோதும் சுவீடன்- கனடா..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்கியது.டோக்கியோ ஒலிம்பிக்கின் 9-வது நாளான இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்தியா சார்பில் 125 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு வெள்ளி பதக்கமும், மகளிர் ஒற்றையர் டென்னிஷில் பி.வி.சிந்து வெண்கலம் பதக்கமும் வென்றனர். இந்நிலையில், இன்று மகளிருக்கான கால்பந்து அரையிறுதி போட்டி 2 நடைபெற்றது. ஒரு போட்டியில்  சுவீடன்-  ஆஸ்திரேலியா மோதியது. மற்றோரு போட்டியில் கனடா- அமெரிக்கா மோதியது. இதில், சுவீடன்-  ஆஸ்திரேலியா போட்டியில் சுவீடன் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கனடா- அமெரிக்கா போட்டியில் கனடா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால், தங்க பதக்கப்போட்டியில் சுவீடன்- கனடா ஆகிய இரு அணிகளும் வருகின்ற 6-ஆம் தேதி மோதுகிறது. வரும் 5-ஆம் தேதி வெண்கலப் பதக்கப்போட்டியில் ஆஸ்திரேலியா- அமெரிக்கா அணிகளும் மோதுகிறது.

ஆஸ்திரேலியா – 33 பதக்கங்களையும் , அமெரிக்கா- 64 பதக்கங்களையும் , சுவீடன்- 4 பதக்கங்களையும் , கனடா- 14 பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments