Tuesday, September 21, 2021
HomeOthersTokyoParalympics2020:பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் பவினா படேல்..!

TokyoParalympics2020:பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் – காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் பவினா படேல்..!

பாரலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் பிரேசிலின் ஜாய்ஸ் டி ஒலிவேராவை 3-0 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது.மேலும்,பாரா ஒலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது.இந்தியா சார்பில், இதுவரை இல்லாத அளவுக்கு தடகளம், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான விளையாட்டுகளில், 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

அதன்படி,நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் (C4) க்ரூப் போட்டியில்,இந்திய வீராங்கனை பவினா படேல், கிரேட் பிரிட்டன் வீராங்கனை மேகனை எதிர்த்து 1-3 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில்,பாரலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று இந்தியாவின் பவினா படேல் பிரேசிலின் ஜாய்ஸ் டி ஒலிவேராவை 3-0 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.இதனால்,இன்று மாலை 3.50 மணிக்கு, செர்பிய வீராங்கனையை எதிர்த்து பவினா காலிறுதி போட்டியில் எதிர்கொள்ள உள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments