Monday, September 20, 2021
HomeSportsTokyoParalympics:இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதி செய்த பவினா பென்....!

TokyoParalympics:இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதி செய்த பவினா பென்….!

டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில்,இந்தியாவின் பவினா பென் சீனாவின் மியாவோ ஜாங்கை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி,நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு  காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த பெரிக்கை  11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, பவினா அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில்,பவினா படேல் சீனாவின் மியாவோ ஜாங்கை எதிர்கொண்டார்.இப்போட்டியின் இறுதியில்,பவினா 3-2 (11-7, 7-11, 4-11, 11-9, 8-11) என்ற செட் கணக்கில் மியாவோவை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.இதனால்,பவினா பென் படேலுக்கு வெள்ளி அல்லது தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.இதன்மூலம்,இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments