Tuesday, September 21, 2021
HomeOthersஒலிம்பிக் ஜோதி ஏந்திய இந்திய வீராங்கனைக்கு வந்த சோகம்..!

ஒலிம்பிக் ஜோதி ஏந்திய இந்திய வீராங்கனைக்கு வந்த சோகம்..!

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 2012 ம் ஆண்டு இந்தியாவுக்காக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய அசாம் வீராங்கனை பிங்கி கர்மாகர் இன்று தயிலைத் தோட்டத்தில் ரூ .205 தினக்கூலிக்காக வேலை செய்கிறார்.

இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் தனக்கு உதவவில்லை, அரசும் உதவவில்லை என்கிறார் பிங்கி கர்மாகர். லண்டன் ஒலிம்பிக்கில் டார்ச் ஏந்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட பிங்கி கர்மாகர் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்த வீராங்கனை அம்போவென இப்போது கூலி வேலை செய்து வருகிறார்.

லண்டன் ஒலிம்பிக்சிற்கு பிறகு இந்தியா வந்த போது 17 வயதாக இருந்த பிங்கி கர்மாகருக்கு மேள தாள, சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரும் முன்னாள் அசாம் முதல்வருமான சர்பானந்த சோனோவால் பிங்கி கர்மாகரை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றார்.ஆனால் அதன் பிறகு 2 ஒலிம்பிக் போட்டிகள் நடந்து விட்டன, ஆனால் பிங்கி கர்மாகர் தன் திப்ருகார் மாவட்டத்தின் பார்பூரா டீ எஸ்டேட்டில் ரூ .167 தினக்கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தார், இன்று திருத்தப்பட்ட கூலியாக ரூ .205 பெறுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments