Tuesday, September 21, 2021
HomeCricketஇன்றைய போட்டியில் திருச்சி வாரியர்ஸ் Vs திருப்பூர் தமிழன்ஸ் மோதல் ..!

இன்றைய போட்டியில் திருச்சி வாரியர்ஸ் Vs திருப்பூர் தமிழன்ஸ் மோதல் ..!

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக ரசிகா்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகின்றது.

இந்நிலையில், இன்று 14-வது லீக் போட்டி  ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியா்ஸ் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.

ரூபி திருச்சி வாரியா்ஸ் வீரர்கள்: 

அமித் சாத்விக், கே முகுந்த், நிதிஷ் ராஜகோபால், முகமது அட்னான் கான், ஆண்டனி தாஸ், சரவன் குமார், ஆதித்யா கணேஷ் (விக்கெட் கீப்பர் ), ஆகாஷ் சும்ரா, எம் மதிவண்ணன், ரஹில் ஷா (கேப்டன் ), எம் பொயமொழி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திருப்பூா் தமிழன்ஸ் வீரர்கள்: 

எஸ் தினேஷ், எஸ் சித்தார்த், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), மான் பாஃப்னா, ஆர் ராஜ்குமார், எம் முகமது (கேப்டன்), எஸ் அரவிந்த், பி பிரான்சிஸ் ரோகின்ஸ், அஸ்வின் கிறிஸ்ட், எஸ் மோகன் பிரசாத், கே கவுதம் தாமரை கண்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரூபி திருச்சி வாரியா்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி  அதில் 2 வெற்றி மற்றும் 2 தோல்வியடைந்து  4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி  அதில் 1 வெற்றி மற்றும் 1 தோல்வியடைந்து  2 புள்ளிகள் பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் ரூபி திருச்சி வாரியா்ஸ் அணி வெற்றிபெற்றால் 6 புள்ளிகள் பெற்று புல்லிபட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments