Tuesday, September 21, 2021
HomeCricketஜோ ரூட்டை விமர்சிக்கும் இங்கிலாந்து ஊடகங்கள்..!

ஜோ ரூட்டை விமர்சிக்கும் இங்கிலாந்து ஊடகங்கள்..!

டெஸ்ட் போட்டியில் ஷமியும் பும்ராவும் 20 ஓவர்கள் ஆடிய பிட்சில் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் 60 ஓவர்களில் முடிவில் 120 ரன்களுக்கு தோற்றதை அடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மீது இங்கிலாந்து ஊடகங்கள் கடினமான விமர்சனம் வைத்துள்ளன.

டெலிகிராப் பத்திரிக்கையில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி பாய்காட் கூறுகையில்.இந்த டெஸ்ட் போட்டி இரண்டு விஷயங்களை நிரூபித்துள்ளது என்னவென்றால் இங்கிலாந்தை உணர்ச்சி ஆதிக்கம் செலுத்தியது அறிவு ஜன்னல் வழியாகத் தூக்கி வீசப்பட்டது என கூறினார்.வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்பட்டாலும் உணர்ச்சிவயப்பட்டாலும் கேப்டன் என்பவர் நிதானத்துடன் இருக்க வேண்டும் என் மேலும் கூறினார்.

வைடன் பத்திரிகையாளர் பூத் ரூட் கேப்டன்சி பற்றி கூறும்போது, “மொயின் அலி பந்தில் பும்ராவுக்கு ரூட் கேட்சை விட்டார். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியதால் எட்ஜ் எடுத்ததும் அவருக்கு திகைப்பு ஏற்பட்டு கேட்சை இழந்தார் என்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட் இது போன்ற இருண்ட காலங்களைக் கடந்து வந்துள்ளது, அத்தகைய இருண்ட தருணமே இது.” என்று சாடியுள்ளார்.

கமாண்டர் டேவிட் லாய்ட் கூறும்போது, “இங்கிலாந்து பழிவாங்குவதில் நேரத்தைச் செலவிட்டது. டெய்ல்-எண்ட் பார்ட்னர்ஷிப் எப்போதும் ஒரு மகா விஷயமாகும். இங்கிலாந்தை கோமாளியாக்கி ஷமி, பும்ரா அங்கு நன்றாக அனுபவிக்க செய்தனர். இங்கிலாந்து மொத்தத்தில் அனைத்தையும் இழந்தது” என்றார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments