Tuesday, September 21, 2021
HomeCricket1 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி..!

1 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி..!

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்தப்போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி. பாக்கிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கிடையே முதல் டெஸ்ட் ஜமைக்காவில் நடைபெற்றது இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதில் முதலில் பெட்டிங் செய்த பாக்கிஸ்தான் அணி முதல் பேட்டிங்கில் 217 ரங்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பஹாத் ஆலம் 56 ரன்னும், பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.

சீலஸ் தலா 3 விக்கெட்டும், கேமார் ரோச் 2 விக்கெட்டும் எடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிராத்வெயிட் 97 ரன்னிலும், ஹோல்டர் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 4 விக்கெட்டும், அப்பாஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சீலஸ் 5 விக்கெட்டும், ரோச் 3 விக்கெட்டும், ஹோல்டர், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments