Monday, September 20, 2021
HomeCricketகோப்பையை வெல்லப்போவது யார்..? இன்று 3-வது டி-20 போட்டி..!

கோப்பையை வெல்லப்போவது யார்..? இன்று 3-வது டி-20 போட்டி..!

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி-20  போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய-இலங்கை இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா 1 போட்டியில்  வென்று சமநிலையில் உள்ளதால் 3-வது போட்டி ரசிகர்கள் மத்தியில் யார் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments